யாழ்ப்பாணம் – அச்சுவேலி, தீர்த்தங்குளம் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தீப்பரவல் நேற்றிரவு ஏற்பட்டதாக அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தீப்பரவலால் எந்தவிதமான ஆபத்துகளும் நேரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
