வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான அடியார்கள் அரோகரா கோஷம் முழங்க அந்தண சிவாச்சாரியர்கள் கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமான நயினாதீவு அம்பாளின் பெருந்திருவிழா தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது.
இதில், வரும் 19ஆம் தேதி முத்துச்சப்பரம், 21ஆம் தேதி கைலாச வாகனம், 27ஆம் தேதி சப்பரம் திருவிழா மறுநாள் 28ஆம் தேதி தேர்த் திருவிழா நடைபெறவுள்ளது.
தொடர்ந்து, 29ஆம் தேதி தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை கொடியிறக்கமும் நடைபெறும். மறுநாள் பூங்காவனத் திருவிழா நடைபெறவுள்ளது.
