அமெரிக்காவில் நடைபெற்ற பலதரப்பு ஆகாயப் போர்ப் பயிற்சியில் சிங்கப்பூர் விமானப்படை மூன்று விருதுகளை வென்றிருக்கிறது.
Red Flag எனும் அந்தப் பயிற்சியில் சிறந்த அணித் தளபதி, முன்னணிப் பராமரிப்புப் பிரிவு, ஆக அதிக எண்ணிக்கையிலான போர் நடவடிக்கை ஆகிய விருதுகளை அது கைப்பற்றியது.
அலாஸ்காவில் உள்ள இயெல்சன் விமானப் படைத் தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சி முடிவடைந்தது.
அதற்கு பத்து F-16 ரக விமானங்களையும் எட்டு F-15SG ரக விமானங்களையும் சிங்கப்பூர் அனுப்பியிருந்தது.
சிங்கப்பபூர் அதிகாரிகள் 60 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள் மற்றும் 2,100 இற்கும் மேற்பட்ட சேவையாளர்களுடன் பயிற்சி செய்தனர்.
அமெரிக்கா, பெல்ஜியம், கனடா, நியூஸிலந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டன.
பாவனை செய்யப்பட்ட போர்ச்சூழலில் ஆகாயப் போர், தாக்குதல் ஆகிய பயிற்சி நடவடிக்கைகளில் வீரர்கள் ஈடுபட்டனர்.
