சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிங்ஹாய் மாகாணத்தின் ஹைசி மாவட்டத்தில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 5:06 மணிக்கு (பெய்ஜிங் நேரம்) இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்து உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், ள்ளூர் அதிகாரிகள் நிலைமையை மதிப்பிட்டு வருகின்றனர்.

முதன்மை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுமார் 5 ரிக்டர் அளவில் சில தொடர் அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles