ஈரான் ஒருபோதும் அணுவாயுதங்களை வைத்திருக்காது : ட்ரம்ப் – நெதன்யாகு உறுதிமொழி

ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்காது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் உறுதிமொழிந்துள்ளனர்.

வொஷிங்டனில் நேற்று இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொண்ட நிலையில் இந்த உறுதிமொழி எட்டப்பட்டுள்ளது.

“இது மிகவும் நேர்மறையான சந்திப்பாக இருந்தது. பிரதமரும் அதிபரும் அன்றைய முக்கியப் பிரச்சினைகள், குறிப்பாக ஈரான் குறித்து, ஒரு சிறந்த மற்றும் விரிவான விவாதத்தை நடத்தினர்,” என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்காது என்பதை உறுதி செய்வதற்கான தங்கள் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையை வெள்ளை மாளிகை நேர்மையான மற்றும் பயனுள்ள சந்திப்பு என விவரித்துள்ளது.

2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் மீண்டும் பதவியேற்றதிலிருந்து, ட்ரம்பிற்கும் நெதன்யாகுவிற்கும் இடையே நடைபெறும் எட்டாவது சந்திப்பு இதுவாகும். மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் இஸ்ரேல் தேர்தல்கள் மற்றும் அமெரிக்க இடைத்தேர்தல்களுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளமை கவனம் பெற்றுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles