கால்வாயில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற 4 சிறுவர்கள் நீரில் முழ்கி மரணம்!

மலேசியாவில் கூலிம், Taman Desa Kayangan-னில் பந்தை எடுக்க முற்பட்ட நான்கு சிறுவர்கள் 3 மீற்றர் ஆழமுள்ள கால்வாயில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று மாலை பெய்த கனமழைக்கு பிறகு, 8 முதல் 12 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்களும் பந்து விளையாடச் சென்றுள்ளனர்.

அப்போது பந்து கால்வாயில் விழுந்ததால், அதை எடுக்க முயன்றபோது அவர்கள் நிலைத் தடுமாறி உள்ளே விழுந்ததனர் எனக் கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த மருத்துவக் குழுவினர், இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

எஞ்சிய இரு சிறுவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

​உயிரிழந்தவர்கள் 12 வயது Muhammad Arif Naufan Abdullah, 8 வயது Muhammad Arif Naufan Abdullah, 12 வயது Muhammad Zafril Arsyad Muhamad Azrin மற்றும் 10 வயது Muhammad Iman Nuruddin Khairol Anuar என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து கூலிம் மாவட்டப் பொலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles