நல்லூரில் தியாக தீபம் திலீபனுக்கு வெண்கல உருவச்சிலை – நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பம்

A group of people standing in a circle outdoors while a man in a blue shirt lights a ceremonial flame atop a tall striped pedestal.

A long line of people waiting outdoors, sunlit, beside colorful flags and pink flowering bushes at an event site.

Crowd of people at a Tamil festival entrance with a bright yellow banner, flags, and a central flame brazier near blue steps leading to a shrine area.

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் ஆரம்பமாகின.

நல்லூர் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின்போது, அவரது வெண்கல உருவச்சிலை நிறுவப்பட்டது.

இதன்போது, தியாக தீபம் திலீபனின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவிடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்தனர்.

அதேவேளை, தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த நல்லூர் வடக்கு வீதியிலும் சம நேரத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles