ஸ்டாமர் பதவி விலகலை அறிவிக்க வேண்டும் – வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்தல்

பிரித்தானியாவின் இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும் தோல்வியடைந்துள்ள நிலையில் பதவி விலகல் தொடர்பில் பிரதமர் ஸ்டாமர் அறிவிக்க வேண்டும் என முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்தியுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் அவர் தனது இராஜினாமா தொடர்பான முடிவை அறிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தொழிற்கட்சியில் தலைமைப் போட்டி நடைபெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்குத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்திற்குத் திரும்பி, தொழிற்கட்சித் தலைவருக்கு சவால் விடுவார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே G7 மாநாட்டில் பேசிய ஸ்டாமர் தனது போட்டியாளர்கள் சொல்வது தவறு என்பதை நிரூபிப்பேன் என்றும், மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தனது ஆணையைத் தொடர்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles