ஸிம்பாப்வேயில் ரயிலுடன் பஸ் மோதிய விபத்தில் 9 பேர் பலி!

ஸிம்பாப்வேயில் ரயில் ஒன்றுடன் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளனாதில் குறைந்தது 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ரயில் கடவையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் தண்டவாளத்தைக் கடப்பதற்கு முன்பு, ரயில் வருகிறதா என்பதை சரிபார்க்க தவறியதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஸிம்பாப்வேயில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன; சராசரியாக தினமும் ஐந்து பேர் உயிரிழக்கின்றனர் மற்றும் 38 பேர் காயமடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles