சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்திலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவைக் கைதுசெய்யுமாறு இன்று புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு நீதிமன்றத்தின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த வழக்கு ஒக்ரோபர் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
