சிங்கப்பூரில் 235,000 டொலருக்கும் அதிக மதிப்புள்ள வைரங்கள் திருட்டு!

சிங்கப்பூரில் $235,000 இற்கும் மேல் மதிப்புள்ள வைரத்தை திருடிய குற்றச்சாட்டில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 மற்றும் 42 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சைனாடவுன் வட்டாரத்தில் உள்ள கிரேத்தா ஆயர் வீதியில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்கள் திருடப்பட்ட வைரங்களுடன் விமான நிலையம் ஊடாக தப்பிச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து திருடப்பட்ட வைரங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles