வெப்பநிலை உயர்வு – பிரான்ஸில் சிவப்பு எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளின் வெப்பநிலை அதிகளவு உயர்ந்துள்ளதன் காரணமாக பிரான்ஸின் சில பகுதிகளில் மதுபானத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் 96 மாகாணங்கள் அல்லது பிராந்தியங்களில் இன்று வெப்பநிலைக்குரிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கிலிருந்து பாரிஸ் பகுதி வழியாக பர்கண்டி வரை வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் (102-104 ஃபாரன்ஹீட்) வரை இருக்கும் என்றும், சில பகுதிகளில் 41 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்ட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு நேற்று அவசர கூட்டமொன்றை நடத்தினார்.

இதில் வருடாந்திர ஃபெட் டி லா இசை நிகழ்ச்சிகள் ( Fete de la Musique festivals) மற்றும் பிற பொது நிகழ்வுகளில் மது அருந்துவதற்கு தடை விதித்துள்ளார்.

இருப்பினும், பூங்காக்களை 24 மணி நேரமும் திறந்திருக்குமாறு பாரிஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles