6 மாதங்களில் 702 பொதுமக்கள் மியன்மாரில் படுகொலை!

மியான்மரில் கடந்த 6 மாதத்தில் அந்நாட்டு ராணுவம் 702 அப்பாவி பொதுமக்களை கொன்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த 702 பேரில் 224 பெண்கள் என்றும் 153 பேர் குழந்தைகள் என்றும் ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் வான்வழித் தாக்குதல்களில் பலியானவர்கள் 505 பேர் ஆவர். போர் விமானங்கள், டிரோன்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பொதுமக்கள் வசிப்பிடங்கள் மீது குண்டுமழை இராணுவம் குண்டு மழை பொழிந்துள்ளது.

இது குறித்து ஐநா செய்தித் தொடர்பாளர் ரவினா ஷாம்தசானி கூறுகையில், “இந்த 702 மரணங்களுக்கும் மியான்மர் இராணுவமே முழுப் பொறுப்பு.

இது பிற ஆயுதக் குழுக்களால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களை உள்ளடக்காத, எங்களால் உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச எண்ணிக்கை மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles