ரக்பி பயிற்சியில் பங்கேற்ற மாணவன் மயங்கி விழுந்து மரணம்!

மலேசியாவின் மலாக்கா, தெலுக் மாஸில் ( Telok Mas ) உள்ள ஒரு பாடசாலையில் நடைபெற்ற ரக்பி விளையாட்டு பயிற்சியில் கலந்துகொண்ட மாணவன் ஒருவன் மயங்கி விழுந்த பின்னர் மரணம் அடைந்தான்.

14 வயதுடைய இரண்டாம் படிவ மாணவன் சுமார் 15 நிமிடங்கள் பயிற்சியை முடித்திருந்த நிலையில், இடைவேளைக்குப் பிறகு பயிற்சியாளரின் விளக்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படதால் திடீரென மயங்கி விழுந்து இறந்ததான்.

நேற்று மாலை மணி ஆறு அளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தினால் தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாக உயிரிழந்த மாணவரின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

பள்ளி விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவன் , தனது உடல்நலம் மற்றும் இதர விவகாரங்கள் குறித்து இதற்கு முன் குடும்ப உறுப்பிர்களுடன் ஒருபோதும் பகிர்ந்து கொண்டதில்லை என்றும் அவர் வேதனையோடு குறிப்பிட்டார்.

இதனிடையே அந்த மாணவன் இறந்த விவகாரம் தொடர்பில் பொலிஸார் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடுவர் என பொலிஸ் ஆணையர் அறிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles