பாரிஸில் பொது இடங்களில் மது அருந்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் பிரெஞ்சு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
வெப்ப அலையின் போது மருத்துவமனைகளில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது இன்று நண்பகல் முதல் சனிக்கிழமை காலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸை பல நாட்களாக புழுக்கத்தில் ஆழ்த்திய வெப்ப அலை நிலைமைகள் படிபடியாக குறைந்து கிழக்கு நோக்கி நகரவிருக்கின்றன.
இந்நிலையில் ஜேர்மனியில் வசிப்போது கடுமையான வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய ஜேர்மனி முழுவதும் வெப்பநிலை 40°C-ஐ எட்டக்கூடும் என்றும் செக் குடியரசின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
