மன்னர் சாள்ஸின் சொத்து வரி விவரம் வெளியானது

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் சொத்து வரி விவரம் வெளியாகியுள்ளது.

இதற்கமைய 2024-2025 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அவர் 12.9 மில்லியன் டொலர் செலுத்தினார் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி பிரித்தானியாவில் வரி செலுத்தும் முதல் 100 பேரின் பட்டியலில் மன்னரும் இடம்பெற்றுள்ளார்.

அதே காலகட்டத்தில் வேல்ஸ் இளவரசர் £7.76 மில்லியன் வரி செலுத்தினார் என, வருடாந்திர அரச அறிக்கை மற்றும் கணக்குகளில் உள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மேலும், மன்னரும் ராணி கமிலாவும் கிளாரன்ஸ் ஹவுஸிலேயே தொடர்ந்து வசிப்பார்கள் என்றும், பக்கிங்ஹாம் அரண்மனைக்குக் குடிபெயர மாட்டார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

2023-24 ஆம் ஆண்டிற்கான வரியாக மன்னர் £11.7 மில்லியனையும், அதே காலகட்டத்திற்கு இளவரசர் வில்லியம் £8.34 மில்லியனையும் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னரும் இளவரசர் வில்லியமும் தாங்களாகவே எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்பதை வெளியிடுவது, இருவராலும் எடுக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட முடிவு என்று அவர்களது அலுவலகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கை வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதாகவும், “எங்கள் பொறுப்புக்கூறல் குறித்த பரந்த புரிதலை ஊக்குவிப்பதை” நோக்கமாகக் கொண்டதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை விவரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles