சசெக்ஸ் கோமகனும் கோமகியும், தங்கள் பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லில்லிபெட்டுடன், அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு வருகை தரவுள்ளளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின்போது அரச இல்லத்தில் தங்குவதற்கான அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022இல் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களுக்குப் பிறகு, ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் மேற்கொள்ளும் முதல் பிரித்தானிய விஜயம் இதுவாகும்.
மேலும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மன்னர் சார்லஸ் தனது பேரக்குழந்தைகளைப் பார்ப்பதும் இதுவே முதல் முறையாகும்.
ஒன்பது மாதங்களாகப் பார்க்காத இளவரசர் ஹரிக்கும் அவரது தந்தை மன்னர் சார்லஸுக்கும் இடையிலான உறவுகள் மேம்படுவதை இந்தப் பயணம் உணர்த்துவதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை இந்த விஜயத்தின்போது இளவரசர் ஹரி தனது பிள்ளைகளை முதன்முறையாக ஆல்தோர்ப் ஹவுஸில் உள்ள அவர்களின் பாட்டி இளவரசி டயானாவின் கல்லறைக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
