லண்டன் செல்கிறார் வடக்கு ஆளுநர் வேதநாயகன்

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு வார கால பயணமாக லண்டன் செல்கின்றார்.

இதனால் மாகாணத்தின் நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் அவசரக் கடமைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காகக் கிழக்கு மாகாண ஆளுநர் பதில் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார்.

இதற்கமைய, ஜூலை முதலாம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்தின் மேலதிக நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் ஆளுநரின் கடமைகள் அனைத்தையும் கிழக்கு மாகாண ஆளுநரே கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விஜயமாகவே வடக்கு ஆளுநர் லண்டன் செல்கின்றார் எனக் கூறப்பட்டாலும், அங்கு புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்து வடக்கு அபிவிருத்தி பற்றி பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles