டெங்கு தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போதைய இறப்பு விகிதம் 0.06% ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 51,049 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில், ஜூன் மாதத்தில் மட்டும் 17,208 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது அந்த மாதத்தில் நோய்த்தொற்றுகள் கணிசமாக அதிகரித்திருப்பதைக் இந்த தரவுகள் காட்டுகின்றன.

மேற்கு, தெற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகபட்ச டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக NDCU தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 124 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவுவதற்கான அதிக அபாயமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles