பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு ஏரியில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், பிரபல சுற்றுலாத் தலமான அப்பர் ஸ்வாட் மாவட்டத்தின் கலாப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள சைபுல்லா ஏரியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இந்த ஏரியில் படகு பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய தற்பொழுது தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறன .
கைபர் பக்துன்க்வா மாகாண முதல்-அமைச்சர் சோஹைல் அப்ரிடி, இந்த விபத்து குறித்து விரிவான விளக்கமளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஏதேனும் அலட்சியமோ அல்லது விதிமீறலோ நடந்திருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவம் பாக்கிஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
