ஜேர்மனியின் தீவிர வலதுசாரி AfD கட்சியின் மாநாடு நேற்று (4) இடம்பெற்ற நிலையில் அக் கட்சிக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். சுமார் 15,000 பேர் இதில் கலந்துகொண்டிருக்கலாம் என பெலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் அக்கட்சியின் மாநாட்டிற்கு செல்லும் முக்கிய சாலைகளையும் இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ஜேர்மனி முழுவதும் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலவரத் தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிராந்தியத் தேர்தல்களில் ஏஎஃப்டி (AfD) கட்சி பெரும்பான்மையை பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
