உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையுடன் கூடிய புறக்கோள் கண்டுப்பிடிப்பு

பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கக்கூடிய மற்றொரு தனித்துவமான புறக்கோளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியின் “அருகிலுள்ள அண்டைக்கோள்” என்று அழைக்கப்படும் இந்தக் கோளுக்கு GJ 3378b எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது 25 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வேற்றுக்கிரக உயிர்களைத் தேடும் முயற்சியில் கண்டறியப்பட்ட மிகவும் நம்பிக்கைக்குரிய கோள்களில் ஒன்றாக இது காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பூமியை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான அளவுள்ள இந்தக் கோள், சூப்பர்-எர்த் வகையைச் சேர்ந்தது.

இது சிவப்பு குள்ளன் எனப்படும் ஒப்பீட்டளவில் அருகிலுள்ள ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.

இந்தக் கண்டுபிடிப்பின் சிறப்பு என்னவென்றால், இந்தக் கோள் அந்த நட்சத்திரத்தின் “வாழத் தகுந்த மண்டலத்தில்” அல்லது “பொன் மண்டலத்தில்” அமைந்துள்ளது.

இந்த மண்டலம், ஒரு கோளின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கு உகந்த வெப்பநிலையாகும்.

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள மெக்டொனால்ட் ஆய்வகத்தில் இருக்கும் 10-மீட்டர் ஹாபி-எபர்லி தொலைநோக்கியில் உள்ள ‘வாழத்தகு மண்டலக் கோள் கண்டுபிடிப்பான்’ (Habitable-zone Planet Finder) கருவியையும், அரிசோனாவில் உள்ள WIYN தொலைநோக்கியில் உள்ள NEID நிறமாலைமானியையும் பயன்படுத்தி இந்தக் கண்டுபிடிப்பு செய்யப்பட்டது.

இந்த சூப்பர்-எர்த், சூரியனிடமிருந்து பூமி பெறும் கதிர்வீச்சில் 90%-ஐ அதன் தாய் நட்சத்திரத்திலிருந்து பெறுகிறது என்றும், இது உயிர்கள் வாழ்வதற்கு மிகவும் உகந்த சமநிலை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தக் கோள் வாழத்தகு மண்டலத்தில் அமைந்திருந்தாலும், “இதற்கு வளிமண்டலம் உள்ளதா?” என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஒரு கோள் நிலையான மேற்பரப்பு நிலைகளைப் பராமரிக்கவும், விண்வெளியிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் வளிமண்டலம் அவசியமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles