வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உடன் வேண்டும்: நேட்டோவிடம் உக்ரைன் அவசரக் கோரிக்கை

ரஷ்யாவின் தீவிரமடைந்து வரும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தனது நாட்டைப் பாதுகாக்க, தேவையான வான் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, நேட்டோ (NATO) நாடுகளிடம் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளார்.

துருக்கியில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் அவர் இக்கோரிக்கையை முன்வைக்கவுள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்குள் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய இருவேறு ஏவுகணைத் தாக்குதல்களில், குடியிருப்பு வளாகங்கள் தரைமட்டமாக்கப்பட்டு 50-இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜெலென்ஸ்கியின் இந்த உதவிக்கான குரல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெறும் இந்த உச்சிமாநாடு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நேரில் சந்திப்பதற்கான முக்கிய வாய்ப்பாகவும் ஜெலென்ஸ்கிக்கு அமையவுள்ளது.

ரஷ்யாவின் இந்த “கொடுூரமான” தாக்குதல்கள் அதன் பலத்தைக் காட்டவில்லை, மாறாக பலவீனத்தையே காட்டுகின்றன என்பதை ட்ரம்பிடம் விளக்கவும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுத்து ஒரு “கௌரவமான” அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கவும் ஜெலென்ஸ்கி இந்தச் சந்திப்பைப் பயன்படுத்தவுள்ளார்.

நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte), உறுப்பு நாடுகள் உக்ரைனின் இறையாண்மையைப் பாதுகாக்கத் தேவையான உதவிகளை தடையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய தரைப்படைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதிலும், சமீபத்திய வான்வெளித் தாக்குதல்களிலும் உக்ரைன் போர்க்களத்தின் போக்கை மாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles