கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
