சுரேஷ் சாலேவை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து முள்ளிவாய்க்காலுக்கான பழிவாழங்கலை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது. புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் இடமளிக்கப் போவதில்லை – இவ்வாறு கூறியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ஸ.
அரச புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேக்கு ஆதரவாக இன்று திங்கட்கிழமை கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது, கருத்து வெளியிட்ட அவர்,
சுரேஷ் சாலேவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து> முள்ளிவாய்க்காலுக்கான பழிவாங்கலை நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கிறது. புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற நாங்கள் இடமளிக்க போவதில்லை. சுரேஷ் சாலேவுக்காக தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம் – என்றார்.
