சுதந்திர நாளையொட்டி தேசிய கொடியேற்ற நிகழ்வுக்குச் செல்வதற்கு முன்பு தனது நண்பர்களை சந்தித்தமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
கொடி ஏற்ற நிகழ்வுக்கு சீக்கிரமாகச் செல்வதை அறிந்துகொண்டு விலங்கு நண்பர்களான மயில், மாடுகள் தன்னை சந்திக்க வந்தன என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது:
“தினமும் காலையில் என் நண்பர்களுக்கு உணவளிப்பது எனது வழக்கமான செயல். நேற்று காலையில், நான் சீக்கிரம் கிளம்புகிறேன் என்பதை எப்படியோ அவர்கள் தெரிந்துகொண்டார்கள்; அதனால், நான் செங்கோட்டைக்கு கிளம்பும்போது அவர்கள் என்னைச் சந்திக்க வந்தார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மிக முக்கியமான நிகழ்வுக்குச் செல்வதற்கு முன்பு தனது நண்பர்களை சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிட்டதை பகிர்ந்துள்ள மோடிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சுதந்திர நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு எண்ணற்ற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு, நிகழ்ச்சி நிரல், சிறப்பு விருந்தினர்கள் என பல இருந்தும் விலங்குகளிடம் மோடி இரக்கத்துடன் நடந்துகொண்டைமை பாராட்டத்தக்கது என பலர் பாராட்டி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி தனது அன்றாட காலைப்பொழுதின் செயல்களில் ஒன்றாக விலங்குகளுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதையும் மோடி பதிவிட்டுள்ளதால், பலரும் இதிலிருந்து உத்வேகம் கொண்டு தங்கள் வீடுகளில் உள்ள விலங்குகளை பராமரிக்க வேண்டும் என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
