ஹங்கேரி பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டை வடகிழக்கு நகரான நியிர்கைஹாசாவுடன் இணைக்கும் M3 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 01:00 மணியளவில் வீதியை விட்டு விலகிய பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என சந்தேகிப்பதாக கூறிய பொலிஸார் அவரை காவலில் எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.

பேருந்தில் பயணம் செய்த 57 பயணிகளில் 35 பேரும், இரண்டு சாரதிகளும் இதுவரை தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் ஒருவரையும், பலத்த காயங்களுடன் ஒன்பது பேரையும், சிறு காயங்களுடன் மேலும் 37 பேரையும் சிகிச்சைக்காக ஹங்கேரியின் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles