சுரேஷ் சாலே ஆதரவுப் போராட்டம் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு தடையாகக்கூடாது – கத்தோலிக்க திருச்சபை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் சுரேஷ் சாலே தடுத்து வைக்கப்பட்டுளளார். இந்த விவகாரத்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணைக்கு தடையாக மாற்றக்கூடாது – என்று கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்தச் சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட கருத்துகள் வருமாறு,

பயங்கரவாதத் தடைச் சட்டம் மனிதநேயமற்ற பல அம்சங்களை கொண்டிருப்பதால் அது திருத்தப்பட வேண்டும் அல்லது முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

எனினும்இ தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலே, இந்தச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்ட காலத்தில் நாட்டின் புலனாய்வு துறையின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது.

அப்போது இந்தச் சட்டத்தின் கீழ் பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவருக்கும் அதே சட்டத்தின் கீழ் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதால் ஒருவருக்கு தனிச்சலுகை வழங்க முடியாது.

சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதுடன்> இந்த விவகாரத்தை முன்னிறுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய விசாரணையை திசைதிருப்பவோ அல்லது தடை செய்யவோ யாரும் முயற்சிக்கக்கூடாது – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles