சீனாவின் காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் பலி

சீனாவின் தென்கிழக்கு நகரமான ஜின்ஜியாங்கில் உள்ள ஒரு காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகளில், ஒரு கட்டடத்திலிருந்து பெரிய அளவில் கரும்புகை எழுவதையும், மக்கள் சிலர் அதன் கூரையில் சிக்கியிருப்பதையும் காண முடிந்தது.

இந்தத் தீ விபத்து “பெரிய அளவிலான உயிர்ச்சேதங்களை” ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய அதிபர் ஷி ஜின்பிங், இதற்கு காரணமானவர்கள் “கடுமையாகப் பொறுப்பேற்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

புஜியான் மாகாணத்தில் உள்ள ஜின்ஜியாங் நகரம், உலகின் 20% விளையாட்டு உதிரிபாக காலணிகளைத் தயாரிப்பதாகக் கூறப்படுவதால், இது பெரும்பாலும் சீனாவின் “காலணி தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் (05:00 BST) ‘ஹுயிடெங் ஃபுட்வேர்’ (Huiteng Footwear) தொழிற்சாலையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டதாகவும், 200 இற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதாகவும் அரசு ஊடகமான சிசிடிவி தெரிவிக்கிறது.

இதில் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தீயை அணைக்கவும், மக்களை மீட்கவும் 500 இற்கும் மேற்பட்ட பணியாளர்களை அதிகாரிகள் அனுப்பியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், தீ விபத்து ஏற்பட்டபோது தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 240 பேர் இருந்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளியேற்றப்பட்ட 213 பேரில், இருவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

ஆரம்பத்தில் காணாமல் போயிருந்த மேலும் 26 பேர் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலையின் தரைத்தளத்தில் தீ விபத்து தொடங்கியிருக்கலாம் என்று ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles