ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் புதிய திட்டம் – இஸ்ரேல் உளவுத் துறை எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைப் படுகொலை செய்ய ஈரானிய அரசு இரகசியமாகத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் தகவல் ஒரு குறிப்பிட்ட சதித்திட்டம் தொடர்பானது என்றும், இது குறித்து அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டி, கடந்த மாதம் 17 ஆம் திகதி அமெரிக்கா ஈரான் இடையே கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் இரத்து செய்துள்ளார்.

கடந்த 2020 ஜனவரியில் அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்ட நிலையில், இதற்கு உத்தரவிட்ட ட்ரம்ப்பை பழிதீர்ப்போம் என ஈரான் தொடர்ந்து கூறி வந்துள்ளது.

ஈரானிய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலியின் இறுதிச்சடங்குகள் நேற்றுடன் (9) நிறைவடைந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் தொடங்கக்கூடும் என சர்வதேச அளவில் அச்சம் நிலவுகின்றது.

துருக்கியில் நடந்த நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க ட்ரம்ப், தன்னைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாகத் தெரிவிதுள்ளார். இந்த அச்சுறுத்தல் காரணமாக, துருக்கியில் இருந்து நாடு திரும்பும்போது கட்டார் நாடு பரிசளித்த சொகுசு விமானத்தில் பயணிப்பதைத் ட்ரம்ப் தவிர்த்துள்ளார்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அவர் தனது உத்தியோகபூர்வ அமெரிக்க இராணுவ விமானத்தில் பயணித்தது உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles