லேபர் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது கட்சி தலைவராகவும், நாட்டின் அடுத்த பிரதமராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அண்டி பர்ன்ஹாம் பெயரை முன்மொழிந்துள்ளனர்.
வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் தொடங்கியதில் இருந்து, பர்ன்ஹாமின் இந்தத் தலைமைப் பதவிக்கான முயற்சிக்கு 322 லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது இப்போட்டியில் அறிவிக்கப்பட்ட ஒரே வேட்பாளராக அவர் நீடிக்கிறார்.
மற்றொரு போட்டியாளர் அவருக்கு எதிராக களம் இறங்குவதை கணித ரீதியாக முற்றிலும் சாத்தியமற்றதாக்க இன்னும் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவு (அதாவது 323 வாக்குகள்) மட்டுமே அவருக்குத் தேவை.
வியாழக்கிழமை ங்களால் வாக்களிக்க முடியவில்லை என்றும், நாடாளுமன்றம் திரும்பியவுடன் பர்ன்ஹாமை ஆதரிக்க உள்ளதாகவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்ப்பது போலவே வேறு யாரும் இப்போட்டியில் பங்கேற்கவில்லை எனில், அடுத்த வாரம் பர்ன்ஹாம் லேபர் கட்சியின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். அதன் பின்னர், ஜூலை 20 அன்று அவர் பிரதமராகப் பொறுப்பேற்பார்.
