யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியின் பள்ளிக்குடா சந்தியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில், 22 வயதுடைய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மன்னார் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று பள்ளிக்குடா சந்தியில் வலதுபுறமாகத் திரும்புவதற்கு முற்பட்டபோது, அதன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், அவருடன் பின்னால் பயணித்தவரும் உடனடியாக மீட்கப்பட்டு பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தெலிகடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
