2027 பட்ஜெட் நவம்பர் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

2027ஆம் நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு அமைச்சு ரீதியாக மதிப்பிடப்பட்ட செலவின விபரங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், இந்த சட்டமூலம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு, ஒக்டோபர் 18ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பர் 12 ஆம் திகதி 2ஆம் இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத் திட்ட உரை) நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்படும். நிதி அமைச்சர் என்ற வகையில் பாதீட்டை முன்வைத்து ஜனாதிபதி உரையாற்றுவார்.

நவம்பர் 13 முதல் 20 வரை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.

நவம்பர் 21 முதல் டிசெம்பர் 14 வரை குழுநிலை திருத்தங்கள் மற்றும் அமைச்சுக்கள் வாரியான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதங்கள் இடம்பெறும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles