இத்தாலிக்கு பயணம் செய்யும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இத்தாலிக்கு பயணம் செய்யும் பிரித்தானிய பிரஜைகளுக்கு அந்நாட்டின் கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO), எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தாலியின் முக்கிய நகரங்கள் முழுவதும் “வன்முறைக் கலவரங்கள், கொள்ளை” மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, தேக்கமடைந்த ஊதியங்கள் மற்றும் அதிகரித்து வரும் இராணுவச் செலவினங்கள் ஆகியவற்றால் தூண்டப்பட்டு, ரோம், மிலன், நேபிள்ஸ், டுரின் மற்றும் போலோக்னா உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ரோமின் கொலோசியத்திற்கு அருகில் காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுதல் மற்றும் கவச வாகனங்களை நிலைநிறுத்தியுள்ளதுடன் நாடு முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் “பொதுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும்” போராட்டக் குழுக்களில் சேருபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் €20,000 அபராதம் விதிக்கப்படும் என அச்சுறுத்தி, மெலோனி அரசாங்கம் அவசரகால சட்டம் ஒன்றையும் இயற்றியுள்ளது.

இந்நிலையில் அங்கு செல்லும் பிரித்தானியர்கள் பொதுவாக அனைத்து அரசியல் கூட்டங்களையும் தவிர்க்கவும், போக்குவரத்து இடையூறுகள் குறித்து உள்ளூர் செய்திகளைக் கண்காணிக்கவும் FCDO அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles