ட்ரம்பை கொலை செய்வது போன்று தெஹ்ரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விளம்பர பலகை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யும் வாசகங்கள் தாங்கிய பதாகைககள் தெஹ்ரான் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தெஹ்ரானின் பரபரப்பான எங்கெலாப் சதுக்கத்திற்கு மேலே இந்த விளம்பரப் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விளம்பரத்தில் தலை குனிந்த நிலையில் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருப்பது போலச் சித்தரிக்கப்பட்டிருந்தது.

அருகில் இருந்த மற்றொரு விளம்பரப் பலகையில், தேய்ந்துபோன இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கக் கொடிகளின் பின்னணியில், ட்ரம்ப், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் இரத்தம் தோய்ந்த முகங்களுடனும் கந்தலான உடைகளுடனும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு போரைத் தூண்டிய, படுகொலை செய்யப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பழிவாங்கக் கோரி, டஜன் கணக்கான மக்கள் அந்தச் சதுக்கத்தில் சிவப்புக் கொடிகளை அசைத்தபடியும், “இரத்தம் சிந்தும்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடியும் ஒன்றுக்கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles