ஈரான் தூதுவரை அழைத்து கடும் கண்டனம் வெளியிட்டது இந்தியா

ஓமான் கடல் பகுதியில் இந்திய பிரஜையொருவர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஈரானின் துணைத் தூதரான முகமது ஜவாத் ஹொசைனியை நேரில் அழைத்து, தனது கண்டனத்தை இந்திய அரசு பதிவு செய்துள்ளது.

எண்ணெய் டாங்கர்கள்மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யவே இந்தத் தூதர் நேரில் வரவழைக்கப்பட்டதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானிய தூதர் இந்திய வெளியுறவு அமைச்சகத்திலிருந்து வெளியேறும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

ஓமான் கடல் பகுதியில் ஈரானிய குரூஸ் ஏவுகணையால் தாக்கப்பட்ட எண்ணெய் டாங்கர் ஒன்றில், உயிரிழந்த இந்திய மாலுமி பணியாளராக இருந்துள்ளார். இத்தாக்குதலில் மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஆறு பேர் இந்தியப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles