கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் மீட்பு

கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையின்போது, நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் முதலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மனித்தோபாவில் பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, கடைசியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் இங்கி மார்க் (78).

இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 7ஆம் திகதி, மார்க் வீட்டில் பொலிசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் வீட்டில் நூற்றுக்கணக்கான துப்பாக்கி முதலான ஆயுதங்கள் இருப்பதும், அவை முறைப்படி பாதுகாப்பாக வைக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.

அவற்றில் சில, கடத்தப்பட்டவை என பொலிஸார் கருதுகிறார்கள்.

அத்துடன், மார்க் வீட்டிலிருந்து துப்பாக்கி குண்டுகளும், 300,000 டொலர்கள் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மார்க் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது ஆயுதக் கடத்தல் முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles