செம்மணி புதைகுழியில் 2 சிறுவர்கள் எலும்புக் கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணி இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியது.

மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக 2 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை இரண்டும் சிறுவர்களுடையதாகும். அதேவேளை இரண்டு என்புக்கூட்டு குவியல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்றைய தினம் என்புக்கூடுகள் எவையும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் , கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் அகழ்வு பணிகள் ஆரம்பமாகியது.

செம்மணி புதைகுழியில் இதுவரையில் 87 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 414 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles