அமெரிக்க தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதல்!

அமெரிக்கா தொடர்ந்து 7ஆவது நாளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.

உலகின் முக்கிய வர்த்தகப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்து, அங்கு செல்லும் சரக்கு மற்றும் மசகு எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் போட்டியாக அமெரிக்கா ஈரானைத் தாக்க, தற்போது ஈரான் வளைகுடா நாடுகள் மீது தனது பதில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

இந்த ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இச்சம்பவத்தால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறன்றமைக் குறிப்பிடத்தக்கது.

இந்​நிலை​யில் ஈரான் ராணுவம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்​ப​தாவது:

ஜோர்​டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறி​வைத்து ஏவு​கணை மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்தினோம். இதில் அமெரிக்​கா​வின் எரிபொருள் நிரப்​பும் விமானங்​கள் மற்​றும் போர் விமானங்​கள் பல சேதம் அடைந்​தன. ஜோர்​டான் மக்​களும், முஸ்​லிம்​களுக்கு எதி​ராக செயல்​படும் அமெரிக்​கர்​களை குறி​வைத்து தாக்​குதல் நடத்த வேண்​டும்.

சிரி​யா​வில் அல்​-டன்ஃப் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை​யும் தாக்​கினோம். ஹார்​முஸ் ஜலசந்தி ஈரானின் முழு கட்​டுப்​பாட்​டில் உள்​ளது. அமெரிக்காவின் தாக்​குதல் தொடரும் வரை, இங்கிருந்து எரிபொருள் கப்​பல்​கள் எது​வும் கடந்து செல்ல அனு​ம​திக்க மாட்​டோம்​. இவ்​வாறு ஈரான்​ ராணுவம்​ தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles