வியட்நாமின் வடக்கு மாகாணமான லை சாவில் உள்ள மலைக் கிராமத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 04 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு பேரை காணவில்லை என்றும் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வியட்நாமின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள் சாலைகள், மின் கட்டமைப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகளைச் சேதப்படுத்தியதோடு, அப்பகுதியில் 238 ஹெக்டேயர் பயிர்களையும் மூழ்கடித்துள்ளதாக அரசாங்கத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
வியட்நாமில் ஜூலை முதல் செப்ரெம்பர் வரையான காலப்பகுதியில் மழைவீழ்ச்சி அதிகளவில் பதிவாகும். கடந்த ஆண்டில் இவ்வாறான ஒரு மழைப் பொழிவால் சுமார் , 489 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
