“ரத்தத்துக்கு ரத்தம்” – சவப்பெட்டியில் ட்ரம்ப் குடும்பம் – ஈரானில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகை

ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி மேல் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், “ரத்தத்திற்கு ரத்தம்” என அடைமொழியிடப்பட்டு தலைநகர் தெஹ்ரானில் இந்த பலகை வைக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானின் பலஸ்தீன சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விளம்பர பலகையில், ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் அவர்களின் ஐந்து பிள்ளைகளான இவான்கா, டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர், எரிக், டிஃப்பனி மற்றும் பாரோன் ஆகியோர் வெள்ளை மாளிகையின் பின்னணியில் சவப்பெட்டிகளின் மேல் இருப்பது போலச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்புதான், தெஹ்ரானின் ஏங்கெலாப் சதுக்கத்தில் மற்றொரு பிரம்மாண்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது.

அதில், ட்ரம்ப் ஒரு திறந்த கருப்பு சவப்பெட்டிக்குள் படுத்திருப்பது போலவும், அதற்கு மேலே பாரசீக மற்றும் ஆங்கில மொழிகளில் “நாங்கள் டிரம்பைக் கொல்வோம்” என்ற வார்த்தைகளும் எழுதப்பட்டிருந்தன.

அந்த சவப்பெட்டியின் மேல், “மினாப் குழந்தைகளின் நினைவாக” என்று எழுதப்பட்டிருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles