தெற்கு வியட்நாமில் இன்று புதன்கிழமை அதிகாலை பயணிகள் பேருந்தொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லாம் டோங் மாகாணத்திலிருந்து ஹோ சி மின் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த 24 இருக்கைகள் கொண்ட பேருந்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வியட்நாம் பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, தீ வேகமாக பேருந்து முழுவதும் பரவியதால் பல பயணிகள் உள்ளே சிக்கியுள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய வியட்நாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
