செங்கடலில் பயணித்த 2 சவூதி கப்பல்கள் மீது தாக்குதல்!

செங்கடலில் பகுதியில் பயணித்த 2 சவூதி எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்தும் ஈரானின் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், செங்கடலில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் இரண்டாவது தடையை ஏற்படுத்துவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வழிகாட்டலில் ஈரானின் மீது புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி தொடர்ந்தும் 12 வது நாளாகவும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

செங்கடலில் கப்பல் போக்குவரத்துக்கு விடுக்கப்பட்ட புதிய அச்சுறுத்தல்களுக்கு முன்பாகவே, ஈரானால் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக முற்றுகையிடப்பட்டமை உலகெங்கிலும் பணவீக்கத்தைத் தூண்டியது.

அத்துடன், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காங்கிரஸ் தேர்தலுக்கு முன்னதாக, இந்தப் போர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினரின் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles