அமெரிக்காவின் தாக்குதல்களில் ஈரானில் 350 அரச ஊழியர்கள் பலி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களில், கடந்த ஐந்து மாதங்களில் 350இற்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஈரானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்தேமே மொஹஜேரானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“தியாகிகளின் குடும்பங்களைச் சந்திக்கும் இந்த வேளையில், மக்களுக்கான சேவையில் ஈடுபட்டிருந்த 350 இற்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் உயிர்த்தியாகம் அடைந்துள்ளனர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

ஹோர்மோஸ்கான் பகுதியில் மக்களின் தொடர்பாடல் சேவைகளைத் தடையின்றி வழங்க BTS தொலைத்தொடர்பு கோபுரங்களின் உச்சியில் நின்று உயிரைத் தியாகம் செய்த பொறியாளர் முதல், மின்சார விநியோகத்தை சீராக வைத்திருக்க உயிரைவிட்ட கம்பியாளர்கள் (wiremen), அத்துடன் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வரை அனைவரும் இதில் அடங்குவர்.

இந்த அன்புக்குரியவர்களைப் பற்றி குறிப்பிடுவது அவர்களுக்குச் செய்யும் மரியாதையாகும். அவர்களின் இந்த மாபெரும் தியாகத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும், அவர்களின் இணையற்ற சேவையை நாங்கள் நன்றியோடு நினைவு கூர்கிறோம் என்பதையும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles