யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் இன்று காலை கனடாவில் காலமானார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியராகவும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளராகவும் , யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
கனடாவுக்கு புலம்பெயர்ந்திருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை காலை கனடாவில் காலமானார்.
