அமெரிக்காவில் குடிதண்ணீர் சேவை முடக்கம்: பின்னணியில் ஈரான் ஹக்கர்கள்?

அமெரிக்காவின் மின்னிசோட்டா மாநிலத்தில் உள்ள பல உள்ளூர் குடிதண்ணீர் விநியோக அமைப்புகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள், ஈரானுடன் தொடர்புடைய ஒரு ஹக்கர் குழுவின் செயற்பாடு அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதுகாப்பு நிறுவனம் மற்றும் அமெரிக்க புலனாய்வாளர்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவல்களின்படி, உள்ளூர் நேரப்படி ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சுமார் 30 குடிதண்ணீர் அமைப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் ஊடுருவல் நடவடிக்கையினால், பெரிய மின்னியாபோலிஸ் பகுதியில் உள்ள சிறிய நகரமான பிராஹாமில் சுமார் இரண்டு மணி நேரம் குடிதண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டு, பின்னர் சேவை சீரமைக்கப்பட்டது.

சைபர் பாதுகாப்பு நிறுவனமான டெனபிள் (Tenable) கருத்துப்படி, இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முறையானது, அமெரிக்க அரசாங்கத்தால் தெஹ்ரானின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகக் குற்றம் சாட்டப்பட்ட ‘CyberAv3ngers’ என்ற இணைய குற்றவியல் குழுவின் பாணியுடன் ஒத்துப் போகிறது.

முறையாகப் பொறுப்பை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அமெரிக்க அதிகாரிகளும் ஈரான் ஹேக்கர்கள் மீதே சந்தேகம் கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு, ஜூலை 22 அன்று, அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு முகமை, அமெரிக்காவில் உள்ள உள்கட்டமைப்புகளுக்கான ஒன்லைன் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு எதிராக ஈரானுடன் தொடர்புடைய அமைப்புகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles