பதவி விலகுகிறார் சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் அறிவிப்பு

சுவீடன் நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் Ulf Kristersson தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அறிவித்துள்ளார்.

349 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நான்கு எதிர்க்கட்சிகளும் 176 இடங்களை வென்றன.

அதே நேரத்தில் பதவி விலகும் பழமைவாத தலைமையிலான கூட்டணியும் அதன் ஆதரவாளர்களும் 173 இடங்களைப் பெற்றனர்.

முன்னாள் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சனின் Magdalena Andersson’s மிதவாத-இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி 99 இடங்களுடன் வெற்றிவாகை சூடியுள்ளது.

இருப்பினும் எதிர்க்கட்சி அணிக்குள் உள்ள சித்தாந்தப் பிளவுகள் காரணமாக, ஒரு நிலையான அரசாங்கத்தை அமைப்பதில் மாக்டலினா ஆண்டர்சன் சவாலை எதிர்கொண்டுள்ளார்.

இதேவேளை குடியேற்ற எதிர்ப்பு ஸ்வீடன் ஜனநாயகக் கட்சி 11 இடங்களை இழந்ததால் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, மொத்தமாக 62 இடங்களைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles