கனடாவிலுள்ள துணைத் தூதரகத்தை மூட அமெரிக்கா திட்டம்

கனடாவிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம் ஒன்றை மூட அமெரிக்கா திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டின் துவக்கத்தில் டிரம்ப் நிர்வாகம் பதவியேற்ற முதல் மாதங்களில், ட்ரம்பின், ‘அமெரிக்காவுக்கே முதலிடம்’ என்ற கொள்கைத் திட்டத்துடன், அமெரிக்க அதிகாரத்துவத்தை முழுமையாக ஒருங்கிணைக்கும் வகையில் மாற்றுவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை கிட்டத்தட்ட ஒரு டசின் வெளிநாட்டுத் தூதரகங்களை மூடுவதற்கான திட்டங்களை துவக்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் வரவு செலவுத் திட்ட அலுவலகம், சுமார் 30 வெளிநாட்டுத் தூதரகங்களை மூடும் திட்டத்திற்குப் பரிந்துரைத்திருந்தது.

சில சிறிய வெளிநாட்டுத் தூதரகங்கள் அத்தியாவசியமற்றவை என்றும் நிதி ரீதியில் பயனற்றவை என்றும் சில நிர்வாக அலுவலர்கள் தனிப்பட்ட முறையில் வாதம் முன்வைத்திருந்தார்கள்.

இந்நிலையில், தற்போது, கிரேனாடா, ஜப்பான், இந்தோனேசியா, கேமரூன் மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகளில், நாட்டுக்கு ஒரு துணைத்தூதரகம் என ஐந்து துணைத் தூதரகங்களை மூட அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாம்.

இவற்றில், கிரெனடாவின் செயின்ட் ஜார்ஜில் உள்ளது, ஒரு தூதரகம் (embassy) ஆகும். இந்தோனேசியாவின் மேடான், கனடாவின் வின்னிபெக் மற்றும் ஜப்பானின் நகோயாவில் உள்ள அலுவலகங்கள், துணைத் தூதரகங்கள் (consulates) ஆகும். அதே நேரத்தில், கேமரூனின் டூவாலாவில் உள்ள அலுவலகம், ஒரு தூதரகக் கிளை அலுவலகம் (embassy branch office) ஆகும்.

இந்த துணைத் தூதரகங்களும், கிளை அலுவலகங்களும், பொதுவாக, அமெரிக்கத் தூதரகம் அமைந்திருக்கும் ஒரு வெளிநாட்டின் தலைநகரத்திற்கு வெளியே உள்ள பிராந்தியங்களில், அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் அலுவலகங்கள் ஆகும்.

முன்னாள் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தின் போது, சீனாவுடன் செல்வாக்கிற்காகப் போட்டியிடும் பசிபிக் பிராந்தியத்தில், பல வெளிநாட்டுத் தூதரகங்களை அமெரிக்க அரசாங்கம் திறந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles