துணைப்பிரதமர் கான் கிம் யோங் (Gan Kim Yong) இன்று வாஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.
அவர் வர்த்தகம், முதலீட்டுக் கூட்டுத் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாடுவார். வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் இன்றும் நாளையும் (25 ஆகஸ்ட்) அமெரிக்காவில் இருப்பார்.
இன்று முதலில் அவர் நியூயார்க் நகரில் வர்த்தக, நிதித் தலைவர்களைச் சந்திப்பார்.
பின்னர் அவர் வாஷிங்டனில் அமெரிக்க நிர்வாகத்தைச் சேர்ந்தோருடன் வலுவான வர்த்தக, முதலீட்டு உறவை அவர் மறுஉறுதிப்படுத்துவார்.
வர்த்தகம், முதலீடு, இரு நாடுகளுக்கும் பொதுவான ஆர்வமுள்ள வளர்ந்துவரும் துறைகள் ஆகியவற்றில் மேலும் கூட்டுத் திட்டங்களை அதிகரிப்பது பற்றியும் பேசப்படவுள்ளது.
சென்ற மாதம் (ஜூலை) சிங்கப்பூர் ஏற்றுமதி மீது அமெரிக்கா 12.5 விழுக்காடு வரி விதித்தது.
கொத்தடிமைத் தொழிலாளிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களின் இறக்குமதியைத் தடுக்க சிங்கப்பூர் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அந்த வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது..
கொத்தடிமைத் தொழிலாளிகளைக் கொண்டு பொருள்களைத் தயாரிப்பதை ஒருபோதும் ஏற்பதில்லை என்று சிங்கப்பூர் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
