நலத்திட்ட உதவிகளை பெற 03 ஆண்டுகளாக தாயின் பிரேதத்தை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த மகன்

தனது தாயின் நலத்திட்ட உதவிகளைக் பெற்றுக்கொள்வதற்காக அவரின் உடலை மூன்று ஆண்டுகளாக குளிர்சாதனப் பெட்டிகளில் மறைத்து வைத்திருந்த பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 80,000 பவுண்ட்ஸை பெற்றுள்ளார்.

60 வயதான கிறிஸ்டோபர் பிலிப்ஸ், மார்ச் 2023 இல் தனது 89 வயதான தாய் சில்வியா பிலிப்ஸ் இறந்த பிறகு, ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக அவரின் உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

மேலும், தனது தாயின் மரணத்திற்குப் பிறகு சுமார் £78,000 நலத்திட்ட உதவிகள் மற்றும் ஓய்வூதியப் பணத்தைப் பெற்றதன் மூலம் செய்த மோசடியையும் அவர் ஒப்புக்கொண்டார்.

மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி பிலிப்ஸுக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles